வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Sun, Oct 20 2024 13:27 IST
Image Source: Cricketnmore

Bangladesh vs South Africa 1st Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், வங்கதேச அணியானது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையுடனும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

BAN vs SA 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நேரம் - அக்.21, காலை 9.30 மணி

BAN vs SA 1st Test:Pitch Report

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடக்கிறது. இங்கு இதுவரை 27 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 13 முறை  முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 327 ரன்களாக உள்ளது, இது ஆட்டம் முன்னேறும் போது குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்குள்ள ஆடுகளம் மிகவும் சமநிலையானது மற்றும் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இதனால் இப்போட்டியில் நிச்சயம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN vs SA 1st Test: Where to Watch?

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்து இத்தொடரை காணலாம்.

BAN vs SA 1st Test: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 02
  • வங்கதேசம் - 00
  • தென் ஆப்பிரிக்கா - 02
  • முடிவில்லை - 00

Bangladesh vs South Africa 1st Test Probable Playing XI

வங்கதேசம் உத்தேச லெவன்: ஸகிர் ஹசன், ஷாத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், நஹித் ரானா.

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், வியான் முல்டர், கேஷவ் மஹாராஜ், காகிசோ ரபாடா, டேன் பீட், லுங்கி இங்கிடி

BAN vs SA 1st Test: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ் (துணைக்கேப்டன்), கைல் வெர்ரைன்
  • பேட்ஸ்மேன்கள் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்ஃபிக்கூர் ரஹிம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டோனி டி ஸோர்ஸி
  • ஆல்-ரவுண்டர் - ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மெஹிதி ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - காகிசோ ரபாடா, நஹித் ரானா, லுங்கி இங்கிடி

BAN vs SA 1st Test Dream11 Prediction, BAN vs SA Dream11 Prediction, Today Match BAN vs SA, BAN vs SA Test Series, BAN vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, BAN vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs South Africa

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை