வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 

Advertisement

அதன்பின் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்காவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, சரித் ஆசலங்கா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் குசால் மெண்டிஸுடன் இணைந்த ஜனித் லியானகே பொறுப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் குசால் மெண்டிஸ் 59 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 67 ரன்கள் எடுத்த நிலையில் ஜனித் லியானகேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், மற்றும் தன்ஸிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியில் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், சௌமியா சர்க்கார் 3 ரன்களிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மஹ்முதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் நஜ்முல் ஹொசைன் தனது அரை சதத்தைப் பத்விசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல்லா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் நஜ்முல் ஹொசைனுடன் இணைந்த முஷ்பிக்கூர் ரஹிமும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நஹ்முல் ஹொசைன் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிமும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நஹ்முல் ஹொசைன் சாண்டோ 122 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹிம் 73 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 44.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News