BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதெச அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மருமணி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஜெரால்ட் கும்பியும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரேய்க் எர்வின் 13 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 3 ரன்களுக்கும், கிளைவ் மடாண்டே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணி 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த பிரையன் பென்னட் - ஜானதன் காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருன்கிய ஜானதன் 4 பவுண்ட்ரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளைவ் மடாண்டே 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தஸ்கின் அஹ்மத் மற்றும் ரிஷாத் ஹொஸைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டே 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் லிட்டன் தாஸும் 23 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் மஹ்முதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தாவ்ஹித் ஹிரிடோய் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், மஹ்முதுல்லா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் வங்கதேச அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.