மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1

Updated: Fri, Oct 04 2024 23:08 IST
Image Source: Cricketnmore

Bangladesh Women vs England Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துமகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

BAN W vs ENG W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.05 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

BAN W vs ENG W T20I Pitch Report

ஆஸ்திரேலியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 50 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 30 முறையும், சேஸிங் செய்த அணி 20 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கலாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN W vs ENG W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • வங்கதேசம் மகளிர் அணி - 00
  • இங்கிலாந்து மகளிர் அணி - 03

BAN W vs ENG W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bangladesh Women vs England Women Probable Playing XI

வங்கதேச மகளிர் அணி: முர்ஷிதா கதுன், சதி ராணி, சோவன் மோஸ்டாரி, நிகர் சுல்தானா (கே), தாஜ் நெஹர், ஸ்வர்ணா எக்தார், ரிது மோனி, ஃபஹிமா காதுன், ரபேயா கான், நஹிதா அக்தர், மருஃபா அக்தர்

இங்கிலாந்து மகளிர் அணி: டேனியல் வையட், ஆலிஸ் கேப்ஸி, சோபியா டங்க்லி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), எமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், டேனியல் கிப்சன், சார்லி டீன், சாரா கிளென், லாரன் பெல்

BAN W vs ENG W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஏமி ஜோன்ஸ்
  • பேட்ஸ்மேன்கள்- ஹீதர் நைட், டேனியல் வையட், முர்ஷிதா கதுன், சோவன் மோஸ்டாரி
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), ரிது மோனி, அலிஸ் கேப்ஸி
  • பந்துவீச்சாளர்கள் – சோஃபி எக்லெஸ்டோன் (துணைகேபடன்), நஹிதா அக்தர், சாரா கிளென்.

BAN W vs ENG W T20I Dream11 Prediction, BAN W vs ENG W Dream11 Team, Fantasy  Cricket Tips, BAN W vs ENG W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh Women vs England Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை