Bangladesh Women vs South Africa Women, Match 16 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய 3 போட்டிகளில்  இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணி விளையாடிய 3  போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியைச் சந்திது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

BAN-W vs SA-W Match 16: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேச மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.12 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

BAN-W vs SA-W Match 16: Ground Pitch Report

வங்கதேச - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 103 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 48 முறையும், சேஸிங் செய்த அணி 54 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN-W vs SA-W Match 16: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 14
  • வங்கதேச மகளிர் அணி - 02
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 11
  • முடிவில்லை - 01
Advertisement

BAN-W vs SA-W Match 16: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bangladesh Women vs South Africa Women Possible XIs

Advertisement

வங்கதேசம் மகளிர் அணி: திலாரா அக்தர், ஷாதி ராணி, சோபனா மோஸ்டாரி, நிகர் சுல்தானா (கேப்டன்), தாஜ் நெஹர், ஷோர்னா அக்தர், ரிது மோனி, ஃபஹிமா கட்டூன், ரபியா கான், நஹிதா அக்தர், மருஃபா அக்தர்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சுனே லூஸ், சோலி ட்ரையன், நதின் டி கிளெர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா

BAN-W vs SA-W Match 16: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: நிகர் சுல்தானா
  • பேட்டர்ஸ்: லாரா வோல்வார்ட் (துணைக்கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சோபனா மோஸ்டாரி, தாஜ் நெஹர்
  • ஆல்-ரவுண்டர்கள்: சுனே லூஸ், மரிஸான் கேப், ரிது மோனி, சுல்தானா கதும்
  • பந்து வீச்சாளர்கள்: நோன்குலுலேகோ மலாபா, ரபியா கான்
Advertisement

BAN W vs SA W T20I Dream11 Prediction, BAN W vs SA W Dream11 Team, Fantasy  Cricket Tips, BAN W vs SA W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh Women vs South Africa Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News