ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து ஷாகிப் அல் ஹசன் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ தெரிவித்துள்ளார். 

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய அவர், “ஷாகிப் அல் ஹசன் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய இழப்பு. ஆனாலும் புதிதாக ஒருவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இது தந்துள்ளது. மேலும் நாளைய போட்டியில் பங்கேற்கும் இளைஞருக்கு இது சாதகமான விசயமாக இதனை நாம் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News