BAN vs PAK: முதல் டெஸ்டுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

Updated: Mon, Nov 22 2021 21:51 IST
Bangladesh pick uncapped Mahmudul Hasan, Rejaur Rahman for first Pakistan Test (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதில் டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இதையடுத்து இப்போட்டிக்கான 16 பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மஹ்முதுல் ஹசன் மற்றும் ரெஜவுர் ரஹ்மான் ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Also Read: T20 World Cup 2021

வங்கதேச அணி: மொமினுல் ஹக் (கே), ஷாத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹொசைன், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹிதி ஹசன், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், அபு ஜெய்த், யாசிர் அலி, மஹ்முதுல் ஹசன், ரெஜவுர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை