மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஆஸ்திரேலியா
  • இடம் - பங்களா தேசிய மைதானம், தாக்க
  • நேரம் - மாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயம் காரணமாக, இத்தொடரிலிருந்து விலகிய நிலையில் மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய களமிறங்குகிறது. 

ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலிய இத்தொடரையாவது கைப்பற்றும் நோக்கில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதேசயம் தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது. ஆனால் லிட்டன் தாஸ், முஸ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் பயோ பபுள் சூழல் காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இத்தொடரில் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர் 

  • மொத்த போட்டிகள் - 4
  • ஆஸ்திரேலிய வெற்றி - 4
  • வங்கதேச வெற்றி - 0
Advertisement

உத்தேச அணிகள்

வங்கதேசம் - முகமது நைம், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் , ஷமிம் ஹொசைன், நசும் அகமது, முகமது சைஃபுதீன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான்.

ஆஸ்திரேலியா - ஆஷ்டன் அகர், ஜோஷ் பிலிப், மிட்செல் மார்ஷ்,ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி, மேத்யூ வேட்(கே), ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்வெப்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - மத்தேயூ வேட், அலெக்ஸ் கேரி
  • பேட்ஸ்மேன்கள் - நைம் ஷேக், மஹ்முதுல்லா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், சௌமியா சர்க்கார், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சாளர்கள் - ஷோரிஃபுல் இஸ்லாம், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News