தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

Advertisement

சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அண்யின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் இத்தொடரை எதிர்கொள்கிறது.

Advertisement

இந்நிலையில், இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளேயிங் லெவனில் காயம் காரணமாக கடந்த தொடரில் இருந்து விலகிய டெம்பா பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளர். இதுதவிர மார்கோ ஜான்சன், ஜெரால்ட கோட்ஸி ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.

இதுதவிர்த்து ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெட்டிங்ஹாம், கேசவ் மஹாராஜ் மற்றும் காகிசோ ரபாடா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள வீரர்கள் மீண்டும் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளது தென் அப்பிரிக்க அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கபடவில்லை.

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பாவுமா (கே), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேஷவ் மஹாராஜ், காகிசோ ரபாடா.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News