பிபிஎல் 2021: ஹெண்ட்ரிக்ஸ் அதிரடி; சிட்னி சிக்சர்ஸுக்கு இரண்டாவது வெற்றி!

Updated: Wed, Dec 08 2021 16:35 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ஹெண்ட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹெண்ட்ரிக்ஸ் 73 ரன்களைச் சேர்த்தார். ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரோஜர்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய ஹரிகேன்ஸ் அணியில் மேத்யூ வேட் 20, டி ஆர்சி ஷார்ட் 21, ஹேண்ட்ஸ்கோம்ப் 47 என விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 130 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை