பிபிஎல் 2021: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது சிட்னி தண்டர்!

Updated: Mon, Dec 06 2021 19:48 IST
Image Source: Google

பிக் பேஷ் 11ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணி டக்கெட், ஹசல்ட் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. தண்டர் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய தண்டர் அணி தொடக்கத்திலேயே அலெக்ஸ் ஹேல்ஸ், வொயிட்மேன், கிக்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் - அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து மீட்டது. இதில் அலெக்ஸ் ரோஸ் அரைசதம் கடந்தார்.

இறுதியில் சிட்னி தண்டர் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை