பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று ஹோபர்ட்டில் நடந்த 26ஆவது ஈக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

ஆதன்படி முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹென்ரி ஹண்ட் 10 பந்தில் 3 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 26 பந்தில் 38 ரன்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஆடம் ஹோஸ் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இருப்பினும் 3ஆம் வரிசையில் இறங்கிய கிறிஸ் லின், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். சதத்தை நெருங்கிய லின் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதில் 58 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். இறுதியில் காலின் டி கிராண்ட் ஹோம் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது.

இதையடுத்து 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜுவெல் மற்றும் மெக்டெர்மோட் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன்,அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் ஜுவெல் 28 பந்தில் 54 ரன்களும், மெக்டெர்மோட் 33 பந்தில் 53 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தாலும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அதன்பின்னர் களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவருமே அதிரடியாக விளையாடி தலா 27 ரன்களை எடுக்க, 18ஆவது ஓவரிலேயே ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி இலக்கை எட்டியது. இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News