பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற  26ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - ஹாபர்ட்ஸ் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெனிகேட்ஸ் அணிக்கு ஷான் மார்ஷ் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, 20 ரன்களை எடுத்திருந்த டி காக் 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜேக் ஃபெரசர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜோர்டன் காக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இறுதியில் வெல்ஸ் மற்றும் கேப்டன் சதர்லேண்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வெல்ஸ் 38 ரன்களையும், சதர்லேண்ட் 12 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் நாதன் எல்லிஸ், டிம் டேவிட், மெரிடித், நிகில் சௌத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணிக்கு கலெப் ஜெவெல் - பென் மெக்டர்மோட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெவெல் 13 ரன்களுக்கும், மெக்டர்மோட் 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைட்டும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த சாம் ஹைன் - கோரி ஆண்டர்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம் ஹைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 51 ரன்கள் எடுத்த நிலையில் சாம் ஹைன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களைச் சேத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News