பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு பென் மெக்டர்மோட் - மேத்யூ வேட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் மெக்டர்மோட் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் மேத்யூ வேட் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த மெக்லிஸ்டர் - கலெப் ஜெவெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 37 ரன்களுக்கு மெக்லிஸ்டரும், 32 ரன்களுக்கு ஜெவெலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய நிகில் சௌத்ரி, டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 22 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் கோரி ஆண்டர்சன் 18 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் தொர்ண்டன், ஜேமி ஓவர்டன், பொய்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் எடுத்த நிலையில் டி ஆர்ஷி ஷார்ட் 20 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த ஜேக் வெதர்லெட் - ஆடம் ஹோஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பவுண்டரி மழை பொழிந்த வெதர்லெட் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆடம் ஹோஸ் 32 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 80 ரன்களையும், ஆடம் ஹோஸ் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைகர்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜேக் வெதர்லெட் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News