பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்க் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் கேப்டன் டேவிட் வார்னார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ கில்க்ஸ் 9 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுது வார்னருடன் இணைந்த சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை சிறுதுநேரம் தடுத்து நிறுத்தினார்.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் சாம் பில்லிங்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் கிரீன், டேனியல் கிறிஸ்டியன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 88 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. ஹோபர்ட் அணி தரப்பில் ரைலீ மெரிடித் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் அணிக்கு மிட்செல் ஓவன் - மேத்யூ வேட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சார்லீ வகிம் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க அந்த அணி 59 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த் நிகில் சௌத்ரீ மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தன்ர். இதில் நிகில் சௌத்ரீ 29 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய வந்த டிம் டேவிட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 68 ரன்களை குவித்தார். அவருட்ன் இணைந்து விளையாடிய கிறிஸ் ஜோர்டனும் தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்க்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.