பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!

Updated: Tue, Jan 14 2025 19:47 IST
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பந்துவீச தீர்மானித்து ரெனிகேட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோஷ் பிரௌன் 8 ரன்களுக்கும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடி வந்த டிம் செய்ஃபெர்ட் 24 ரன்களில்  ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில் சதர்லேண்ட் 15 ரன்களுக்கும், ஹேரி டிக்ஸர் ஒரு அன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ஜேக்கப் பெத்தெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

பின்னர் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்த நிலையி பெத்தெல் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹோபர்ட் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரைலீ மெரிடித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் அணியிலும் தொடக்க வீரர் கலெப் ஜுவெல் ஒரு ரன்னிலும், சார்லீ வகிம் 12 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதற்கிடையில் அதிரடியாக விளையாடிய வந்த மிட்செல் ஓவல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களைச் சேர்த்த கையோடு ரன் அவுட் முறையுல் ஆட்டமிழக்க, ஜேக் டோரன் 7 ரன்களுக்கும், பொறுப்புடன் விளையாடிய நிகில் சௌத்ரீ 36 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடிய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ரெனிகேட்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி வீரர் ஜேக்கப் பெத்தெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை