பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிக்கேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு நாதன் மெக்ஸ்வீனி - ஜேக் வுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மெக்ஸ்வீனி 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜேக் வுட்டுடன் இணைந்த மேத்யூ ரென்ஷாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேக் வுட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், மேத்யூ ரென்ஷா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்தும் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அடுத்து களமிறங்கிய டேனியல் ட்ரீவ் 16 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய அல்சாப் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய மேக்ஸ் பிரைண்ட் 12 ரன்கலையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைச் சேர்த்து அசத்தியது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் கலம் ஸ்டோவ் ஆகியோர் தலா 2 விக்கெட்ட்களை கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோஷ் பிரௌன் மற்றும் டவாண்டா முயேயே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முயேயே 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோஷ் பிரௌனுடன் இணைந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் ஜோஷ் பிரௌன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஒலிவர் பீக் 19 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும், ஹாரி டிக்ஸன் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 95 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் வில் சதர்லேண்டும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அப்போது களமிறங்கிய ஓ நெய்ல் தாமஸ் பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வகித்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News