பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்து ஸ்டார்ஸை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் சாம் ஹார்பர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய பென் டக்கெட்டும் 21 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பியூ வெப்ஸ்டர் 15 ரன்களுக்கும், தாமஸ் ரோஜர்ஸ் ரன்கள் எதுமின்றியும், கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 18 ரன்களிலும், கார்ட்ரைட் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 63 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. 

Advertisement

இதற்கிடையில் 6அவது விக்கெட்டாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனாலும் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை களத்தில் இருந்து 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்தவகையில் ஜோஷ் பிரௌன் 4 ரன்களுக்கும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 19 ரன்களிலும், ஜேக்கப் பெத்தல் ஒரு ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 26 ரன்களிலும், கேப்டன் வில் சதர்லேண்ட் 13 ரன்னிலும், ஹேரி டிக்ஸன் 13 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News