ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பெர்த் அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஹர்ஸ்ட் - கூப்பர் கன்னொலி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேத்யூ ஹர்ஸ்ட் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கூப்பர் கன்னொலி 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஆரோன் ஹார்டி 24 ரன்னிலும், அணியின் கேப்டன் ஆஷ்டர் டர்னர் 22 ரன்னிலும், ஆஷ்டன் அகர் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக் ஹாப்சன் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 47 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜிம்மி பெர்சன் ஒரு ரன்னிலும், டாம் பாண்டன் 7 ரன்னிலும், கேப்டன் காலின் முன்ரோ 6 ரன்னிலும், நாதன் மெஸ்வீனி 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 62 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூ ரென்ஷா மற்றும் மேக்ஸ் பிரைன் இணை பொறுப்புடன் விளையாடி ஓரளவு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 36 ரன்கள் எடுத்த கையோடு மேத்யூ ரென்ஷா விக்கெட்டை இழக்க, 35 ரன்களில் மேக்ஸ் பிரைண்டும் விக்கெட்டினை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழ்ந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழனது 132 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News