பிபிஎல் 2021: ஹரிகேன்ஸை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!

Updated: Sat, Jan 01 2022 14:25 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 29 ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியில் கிறிஸ் லின் 13, பெர்சன் 5, டக்கேட் 5, ஹெஸல்ட் 26, மேக்ஸ் பிரையண்ட் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில் பெஸ்லே அதிரடியாக விளையாடி 44 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஹரிகேன்ஸ் அணியில் மேத்யூ வேட், பென் மெக்டர்மோட், டி ஆர்சி ஷார்ட், ஹேரி ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் தாமஸ் ரோஜர்ஸ் அதிரடி விளையாடி 33 ரன்களைச் சேர்த்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை