பிபிஎல் 2021: ஆல்ரவுண்டாக அசத்திய அபேட்; சிட்னி த்ரில் வெற்றி!

Updated: Tue, Dec 21 2021 17:31 IST
BBL 2021: Sean Abbott all-round performance helps Sydney Sixers comfortable victory (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இருப்பினும் தாமஸ் கெல்லி அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் சீன் அபேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோஷ் பிலிப்பே 23, ஜேம்ஸ் வின்ஸ் 21, ஹென்ரிக்ஸ் 28, டேனியல் ஹூக்ஸ் 7, ஜோர்டன் சில்க் 36 என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.

இருப்பினும் இறுதியில் சீன் அபேட் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை