பிபிஎல் 2022: ரஷித் சுழலில் சரிந்தது பிரிஸ்பேன் ஹீட்!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று 46 ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வெதர்லட் 35 ரன்களையும், ஷார்ட் 27 ரன்களையும் சேர்த்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் வில் பிரிஸ்ட்வெட்ஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பிரிஸ்பேன் ஹீட் அணி ரஷித் கானின் சுழலை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 15 ஓவர்களிலேயே பிரிஸ்பேன் ஹீட் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் ரஷித் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.