பிபிஎல் 2022: சேலஞ்சர் சுற்றில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Sun, Jan 23 2022 19:31 IST
BBL 2022: Adileide Strikers defeat Sydney Thunder by 6 runs (Image Source: Google)

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் இயன் காக்பின்னின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக இயன் காக் பின் 65 ரன்களைச் சேர்த்தார். தண்டர் அணி தரப்பில் குரிந்தர் சந்து, சங்கா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய தண்டர் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 9 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 23 ரன்னிலும் நடையைக் கட்டினர்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஜேசன் சங்கா - அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். 

பின் 61 ரன்னில் சங்கா ஆட்டமிழக்க, 56 ரன்னில் ரோஸும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை