பிபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Tue, Jan 18 2022 17:07 IST
BBL 2022: Hobart Hurricanes defeat Melbourne Renegades by 6 runs (Image Source: Google)

பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி கேப்டன் மேத்யூ வேட், டி ஆர்சி ஷார்ட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ வேட் 48 ரன்களும், டி ஆர்சி ஷார்ட் 37 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் கடின இலக்கை துரத்திய ரெனிகேட்ஸ் அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - ஷான் மார்ஷ் இணை ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 51 ரன்னில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்க, 75 ரன்களில் ஆரோன் ஃபிஞ்சும் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த உன்முக்த் சந்த, மெர்லோ, ஹார்பர் ஆகியோர் இலக்கை எட்டமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ரெனிகேட்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் தாமஸ் ரோஜர்ஸ் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் லமிச்சானே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை