பிபிஎல் 2022: மெரிடித், தாம்சன் பந்துவீச்சில் வீழ்ந்தது தண்டர்!

Updated: Thu, Jan 13 2022 15:43 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி கலெப் ஜெவெல், மேத்யூ வேட் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைக் குவித்தது.

இதில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 83 ரன்களையும், கலெப் ஜெவெல் 51 ரன்களையும் சேர்த்தனர். தண்டர் அணி தரப்பில் குரிந்தர் சந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய தண்டர் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜேசன் சங்கா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்னிலும், சங்கா 31 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இறுதியில் நாதன் மெக்கண்ட்ரூ அதிரடியாக விளையாடி 30 ரன்களைச் சேர்த்து நம்பிக்கையளித்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் தண்டர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரிலே மெரிடித், ஜோர்டன் தாம்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை