பிபிஎல் 2022: ஸ்டார்ஸை பந்தாடியது ரெனிகேட்ஸ்!

Updated: Mon, Jan 03 2022 17:24 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் டீன் 32 ரன்களையும், கார்ட்ரைட் 41 ரன்களையும் சேர்த்தனர். ரெனிகேட்ஸ் அணி தரப்பில் டாப்லி, மேடின்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அரைசதம் கடந்தும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இதன்மூலம் 18 ஓவர்களிலேயே ரெனிகேட்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 50 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை