பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Tue, Jan 04 2022 20:13 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி ஆரோன் ஹார்டியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 45 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஹெய்டன் கெர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இருப்பினும் டேனில் கிறிஸ்டியன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

ஆனால் 73 ரன்களில் கிறிஸ்டியனும் ஆட்டமிழக்க, சிட்னி அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதனால் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை