ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடியும் இந்தியா கோப்பையை வெல்லத் தவறியதால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதே போலவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவி காலமும் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.

Advertisement

கடந்த 2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் என்சிஏவில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த அவர் ரவி சாஸ்திரி தனது பதவியிலிருந்து விலகியதும் இந்திய சீனியர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த பொறுப்பில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்கள் செய்ததை வழக்கமாக வைத்திருந்த நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை ஆகிய 4 முக்கியமான தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

Advertisement

இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 2023 உலகக் கோப்பையுடன் பதவி காலம் நிறைவுக்கு வருவதால் மேற்கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வேண்டாம் என்ற கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹாஷிஸ் நெஹ்ரா மற்றும் என்சிஏ இயக்குனராக இருக்கும் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக நியமிப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.

இதில் நெஹ்ராவை விட அதிகப்படியான அனுபவமும் ஜாம்பவான் அந்தஸ்தும் கொண்டிருப்பதால் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகின. சொல்லப்போனால் அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியாவின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் குஜராத் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் ஆஷிஸ் நெஹ்ரா இந்திய அணியில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்பார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பாராஸ் மாம்ப்ரே, விக்ரம் ரத்தோர், டி திலிப் ஆகிய துணைப் பயிற்சியாளர்களும் அதே பணிகளில் தொடர்வார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் இவர்களுக்கான பதவி காலம் பற்றி பிசிசிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ராகுல் டிராவிட் இந்தியாவின் பயிற்சியளராக மீண்டும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் விவிஎஸ் லக்ஷ்மண் மீண்டும் என்சிஏ இயக்குனராகவும் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News