நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!
நியூசிலாந்து ஏ அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது.
இந்நிலையில் நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் 16 பேர் அடங்கிய இந்திய ‘ஏ’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத் வீரா் பிரியங்க் பஞ்சல் தலைமையிலான இந்த அணியில், திலக் வா்மா, முகேஷ் குமாா், யஷ் தயால் ஆகிய புதிய வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மேற்கு வங்க வீரா் அபிமன்யு ஈஸ்வரன், மத்திய பிரதேசத்தின் ரஜத் பட்டிதாா், மும்பையின் சா்ஃப்ராஸ் கான் ஆகியோரும் இந்த அணியில் இணைந்திருக்கின்றனா்.
இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதும் 3 ஆட்டங்களில் முதல் மற்றும் 3ஆவது போட்டிகள் பெங்களூரிலும், 2ஆவது போட்டி ஹுப்பள்ளியிலும் நடைபெறவுள்ளன. அந்த அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. அதற்கான அணி பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.
இந்திய ஏ அணி: பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்பராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத், உபேந்திர யாதவ், குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.