நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 

Advertisement

8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்கஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. மேக்னா சிங், ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்நேக் ராணா, ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், தானியா பாட்டியா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூணம் யாதவ்.

மாற்று வீராங்கனைகள்: சபினேனி மேக்னா, ஏக்தா பிஸ்த், சிம்ரன் தில் பகதூர்.

இந்திய அணியின் உலகக் கோப்பை போட்டிகள்

  • vs பாகிஸ்தான், மார்ச் 6
  • vs நியூசிலாந்து, மார்ச் 10
  • vs மே.இ. தீவுகள், மார்ச் 12
  • vs இங்கிலாந்து, மார்ச் 16
  • vs ஆஸ்திரேலியா, மார்ச் 19
  • vs வங்கதேசம், மார்ச் 22
  • vs தென்னாப்பிரிக்கா, மார்ச் 27
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News