ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். எனினும் ஜடேஜா நினைத்தது போல் அவ்வளவு எளிதாக தற்போது அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

அதற்கு காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், அக்சர் பட்டேல் , குல்தீபி யாதவ் ஜோடி சிறப்பாக பந்து வீசி அசத்தியது. குறிப்பாக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், டி20, ஒருநாள் என தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அக்சர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா ஐந்து மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவது மூலம் அவருடைய ஃபார்ம் எவ்வாறு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

Advertisement

இதனால் பிசிசிஐ ஜடேஜாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் காரணமாக தற்போது ஜடேஜாவுக்கு தேர்வு குழு உறுப்பினர்கள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது முழு உடல் தகுதியை எட்டிய பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதில் ஜடேஜா எவ்வாறு செயல்படுகிறார். அவருடைய பழைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எடுபடுகிறதா என்பதை பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இடம் பெறுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை ஜடேஜா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா இந்திய அணியின் சேர்க்கப்பட்ட போது அவர் போட்டியில் பங்கேற்காமல் மனைவிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது பிசிசிஐ உள்ள தேர்வு குழுவினரை அதிருப்தி அடைய செய்தது. தற்போது ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டிய நிலையில் அவர் அணிக்கு திரும்பும் பாதை கடினம் ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிசிஐ தற்போது எடுத்த முடிவு போற்றுதலுக்கு கூறியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் ,அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் கூடுதல் வீரராக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்குகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News