ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீப்தி சர்மாவுக்கு பிசிசிஐ விருது; விருது பெற்றவர்கள் முழு பட்டியல்!

Updated: Tue, Jan 23 2024 22:04 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதே போன்று ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை , கூச் பெஹார் கோப்பை என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு கரோனா தொற்றின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. இதில், இந்திய அணியின் வீரர், வீராங்கனைகள், முன்னாள் வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். 

இதில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் சிறப்பான பங்களிப்பை அளித்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அதன்படி 2019-20ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக முகமது ஷமியும், சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வினும், வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டனர். 2021-22ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ஜஸ்ப்ரித் பும்ராவும், வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 2022-23ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், வீராங்கனையாக தீப்தி சர்மாவும் தேர்வுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது முன்னாள் வீரர், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மற்றும் பரூக் இஞ்சினியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 6ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும், 280 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  தனது ஓய்வு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரி, கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராகவும், 2017ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2018-19 மற்றும் 2020-21 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியதுடன், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

பிசிசிஐ விருதுகள் - முழு பட்டியல்

  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (2020-21)- ரவிச்சந்திரன் அஸ்வின்
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (2022-23)- ஷுப்மான் கில்
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை (2019-20)- தீப்தி ஷர்மா
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை (2020-22): ஸ்மிருதி மந்தனா
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை (2022-23): தீப்தி ஷர்மா

சிறந்த சர்வதேச அறிமுக விருதைப் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் (2019-20): மயங்க் அகர்வால்
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் (2020-21): அக்ஷர் படேல்
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் (2021-22): ஷ்ரேயாஸ் ஐயர்
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் (2022-23): யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை (2019-20): பிரியா புனியா
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை (2020-21): ஷெஃபாலி வர்மா
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை (2021-22): எஸ் மேக்னா
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை (2022-23): அமன்ஜோத் கவுர்

மாதவராவ் சிந்தியா விருது

  • 2019-20 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்: ஜெய்தேவ் உனட்கட், சவுராஷ்டிரா
  • 2021-22 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்: ஷம்ஸ் முலானி, மும்பை
  • 2022-23 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்: ஜலஜ் சக்சேனா, கேரளா
  • 2019-20 ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்: ராகுல் தலால் (அருணாச்சல பிரதேசம்)
  • 2021-22 ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்: சர்பராஸ் கான் (மும்பை)
  • 2022-23 ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்: மயங்க் அகர்வால் (கர்நாடகா)

லாலா அமர்நாத் விருது

  • 2019-20- ரஞ்சி கோப்பையில் சிறந்த ஆல் ரவுண்டர்: எம்பி முர்சிங், திரிபுரா
  • 2021-22- ரஞ்சி கோப்பையில் சிறந்த ஆல் ரவுண்டர்: ஷம்ஸ் முலானி, மும்பை
  • 2022-23- ரஞ்சி கோப்பையில் சிறந்த ஆல் ரவுண்டர்: சரண்ஷ் ஜெயின், மத்திய பிரதேசம்
  • 2019-20-  சிறந்த ஆல்ரவுண்டர்: பாபா அபராஜித், தமிழ்நாடு
  • 2020-21-  சிறந்த ஆல்ரவுண்டர்: ரிஷி தவான், இமாச்சல பிரதேசம்
  • 2021-22-  சிறந்த ஆல்ரவுண்டர்: ரிஷி தவான், இமாச்சல பிரதேசம்
  • 2022-23-  சிறந்த ஆல்ரவுண்டர்: ரியான் பராக், அசாம்

சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • பரூக் இஞ்சினியர், ரவி சாஸ்திரி

திலீப் சர்தேசாய் விருது

  • ரவிச்சந்திரன் அஸ்வின் (டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள், 2022-23)
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் (டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 2022-23)

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த நடுவர்

  • 2019-20 - கே.என்.ஏ.பத்மநாபன்
  • 2020-21 - விருந்தா ரதி
  • 2021-22 - ஜெயராமன் மதனகோபால்
  • 2022-23 - ரோஹன் பண்டித்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை