ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!

Updated: Wed, Jan 17 2024 11:36 IST
Image Source: Google

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 அன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அதற்கு பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டை பொறுத்தவரை மூன்று ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி மற்றும் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

விராட் கோலி அடுத்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். ஜனவரி 25 அன்று டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு இந்திய அணி ஜனவரி 20 முதல் வலைப் பயிற்சி செய்ய உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்வாரா? என்ற கேள்வி இருந்தது.

தற்போது அவர் இது குறித்து பிசிசிஐ-யிடம் பேசி இருப்பதாகவும், அதன் படி ஜனவரி 20 அன்று இந்திய அணியுடன் பயிற்சி செய்யும் விராட் கோலி 21ஆம் தேதி மாலை முதல் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் அயோத்தி சென்று அங்கே ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். பிசிசிஐ-யும் கோலி விடுப்பு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு மட்டுமே ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட பிற முன்னணி வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஒருவேளை அவர்களும் இந்த விழாவில் பங்கேற்க நினைத்து இருந்தால் இந்திய அணியின் பயிற்சிக்கு சிக்கல் எழுந்திருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை