சஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!

Updated: Fri, Feb 25 2022 13:05 IST
BCCI May Ask Wriddhiman Saha To Explain Breach Of Central Contract (Image Source: Google)

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா. தற்போது 37 வயதான சாஹாவுக்கு ரிஷப் பந்தின் வருகைக்கு பிறகு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் கிடைத்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சாஹா இடம்பெறவில்லை.

சாஹாவுக்கு பதில் கே.எஸ் பரத் அணியின் 2ஆவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சாஹாவுக்கு இனி வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது, யாருக்கும் வாய்ப்பில்லை என்று தேர்வுக்குழு சொல்லாது. இது இலங்கை தொடருக்கான முடிவு தான் என சேத்தன் சர்மா கூறியிருந்தார். 

இதனால் சீனியர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க தொடரின் போதே பயிற்சியாளர் டிராவிட், இனி தேர்வுக்குழு தமக்கு வாய்ப்பு வழங்காது. ஓய்வு பெறுவதை பற்றி யோசியுங்கள் என்று கூறி இருந்தார். இதே போல் இந்தியா வந்ததும், தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இனி இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இனி உங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்காது என்று கூறியதாக சாஹா பேட்டி ஒன்றை அளித்தார்.

ஆனால், 3 மாதத்திற்கு முன்னால், கங்குலி என்னிடம் கூறினார். தாம் பதவியில் இருக்கும் வரை அணியில் தமக்கு இடம் இருக்கும் என்று சொன்னதாக சாஹா தெரிவித்தார். சாஹாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சேத்தன் சர்மா, கங்குலீ, டிராவிட் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, தேர்வுக்குழுவில் நடந்த விசயம் குறித்து வெளிப்படையாக பேசியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. மேலும், தனிப்பட்ட முறையில் தங்களிடம் கூறியதை வெளிப்படையாக பத்திரிகைக்கு பேட்டி அளித்தன் மூலம் பிசிசிஐயின் ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், உடனடியாக விளக்கம் அளிக்கும் படி சாஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஒருவரை சாஹா சிக்க வைத்ததால், அதன் பின் விளைவுகள் தான் இதுவா என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை