ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களின் நிலை என்ன?

Updated: Fri, May 06 2022 17:41 IST
BCCI official on Form out players (Image Source: Google)

15ஆவது ஐபிஎல் சீசன் தொடர் 50 லீக் போட்டிகளை கடந்து தற்போது ப்ளே ஆஃப் சுற்றை எட்டி வருகிறது. இந்த சீசனில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா போன்ற அணிகள் சொதப்பி வருகின்றன.

சாம்பியன் அணிகள் தான் சொதப்புகின்றன என்று பார்த்தால், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலரும் சொதப்பி வருவது தான் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்களான இஷான் கிஷான், ரோகித் சர்மா இருவருமே ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். கே.எல்.ராகுல் ஓரளவிற்கு தான் அதிரடி காட்டுகிறார்.

மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் போன்றவர்களும் தற்போது வரை பழைய ஸ்ட்ரைக் ரேட்டிற்கு வரவில்லை. ஃபினிஷர்களில் இன்னும் மோசமாக ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். அவர் டாப் ஆர்டரில் களமிறங்கிய போதும், பெரிதாக ரன் அடிக்க முடியவில்லை.

வீரர்கள் இந்த நிலைமையில் இருந்தால், இந்திய அணி எப்படி டி20 உலகக்கோப்பைக்கு செல்லும் என்ற கவலை உருவாகியுள்ளது. அடுத்ததாக வரவுள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் கூட இவர்களுக்கு ஓய்வுக்கொடுத்து ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இருந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ஐபிஎலில் விளையாடுவதை சர்வதேச போட்டிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. ஒரேயொரு தொடரில், அதுவும் புதுமுக வீரர்களுக்கு எதிராக ஆடுவதை வைத்து இந்திய வீரர்களை எடைபோடுவது எந்த விதத்தில் ஞாயம். தற்போது சொதப்புபவர்கள், முன்பு சர்வதேச அளவில் கலக்கியவர்கள் தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே அணித்தேர்வு அப்போதைய சூழல் பொறுத்து தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை