ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

Updated: Sat, Dec 31 2022 19:45 IST
BCCI releases names of best players of 2022 in all 3 formats (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டியிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தாலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்த ஆண்டை வெற்றியுடன் முடித்துள்ளது இந்திய அணி. 

இந்நிலையில் நடப்பாண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்களில் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி கிட்டத்தட்ட 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்  7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 680 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 146 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 முறை அரை சதமும், 2 முறை சதமும் அடித்துள்ளார்.

இதே போன்று பந்துவீச்சில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், சிறந்தது 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான். 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார். 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 724 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்திருக்கிறார். 6 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் அடித்துள்ளார். பந்து வீச்சில் முகமது சிராஜ் சிறந்து விளங்கியுள்ளார். 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான் சிறந்ததாக கருதப்படுகிறது.

டி20 பார்மேட்டில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் சிறந்து விளங்கியுள்ளார். 31 போட்டிகளில் 1164 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார். 9 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் விளாசியிருக்கிறார். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார் சிறந்தவராக திகழ்கிறார். 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை