இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களிலும், ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், தீபக் ஹூடா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலும் நீடித்து வருகிறது.
இந்த வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்த போட்டி அருமையாக இருந்தது. இன்றிரவு எங்கள் அணியில் சில விஷயங்கள் சரியாக அமைந்தது. மேலும் அணி வீரர்கள் இன்று சிறப்பாக விளையாடினார்கள். மேலும் அணி வீரர்கள் மீண்டும் மகிழ்ச்சியடைவதைப் பார்பதற்கு சந்தோஷமா இருந்தது. ஏனெனில் இன்று எங்களுக்கு தேவைப்பட்ட பார்ட்னர்ஷிப்பை எங்களால் உருவாக்க முடிந்தது.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் இந்த நிலைமையில நாங்கள் நிதீஷ் ரெட்டியின் இடத்தில் கிளாசெனை களமிறக்க முடிவுசெய்தோம். ஏனெனில் இங்கு எங்களின் தரவுகள் சிறப்பாக இல்லை. அந்த திட்டம் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்றாலும், இப்போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது. இன்னும் இத்தொடரில் நாங்கள் பல சவால்களை எதிர்கொள்ல வேண்டிவுள்ளது. இருப்பினும் இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.