ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

Updated: Mon, Dec 09 2024 21:31 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்த இரு தொடர்களையும் 2-1 என்ற கணக்கில் இழந்த ஜிம்பாப்வே அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியுன் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுக வீரர் ஸுபைத் அக்பாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தர்விஷ் ரசூலியும் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த முஜீப் உர் ரஹ்மனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக சமீபத்தில் ஜிம்பாப்வேவிற்கு புழம்பெயர்ந்த் இங்கிலாந்து வீரர்கள் சாம் கரண், டாம் கரண் அகியோரிடன் சகதரர் பென் கரணுக்கு ஜிம்பாப்வே ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இவர்களின் தந்த கெவின் கரண் ஜிம்பாப்வே அணிக்காக1983 முதல் 1987ஆம் ஆண்டுவரை விளையாடியுள்ளார். 

இதில் சாம் மற்றும் டாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், பென் கரண் கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே ஒருநாள் அணியின் கேப்டனாக கிரேய்க் எர்வினும், டி20 அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸாவும் தொடர்கின்றனர். 

ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரைன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மதவெரே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மஸகட்ஸா, தஷிங்கா முசேகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ந்ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி.

ஜிம்பாப்வே ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரைன் பென்னட், பென் கரன், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மஸகட்ஸா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ந்ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நயாச்சி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்

ஆஃப்கானிஸ்தான் டி20 அணி: ரஷீத் கான் (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது இஷாக், செதிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பதின் நைப், கரீம் ஜானத், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக்.

ஆஃப்கானிஸ்தன் ஒருநாள் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், செதிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, அல்லா கசன்ஃபர், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சமி, நவீத் ஜத்ரான், ஃபரித் அஹ்மத் மாலிக்.

Also Read: Funding To Save Test Cricket

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 9, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 2ஆவது டி20 போட்டி- டிசம்பர் 11, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 3ஆவது T20I போட்டி - டிசம்பர் 12, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • முதல் ஒருநாள் போட்டி - டிசம்பர் 15, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 2ஆவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 17, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 3ஆவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 19, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • முதல் டெஸ்ட் - 26-30 டிசம்பர், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
  • இரண்டாவது டெஸ்ட் - 2-6 ஜனவரி, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை