ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

Advertisement

அதில் மிக முக்கியமாக எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் மினி ஏலத்திலும் அவர்களால் பங்கேற்க முடியாது என்றும், ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று அதிரடி முடிவினையும் ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது.

ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற சில வெளிநாட்டு வீரர்கள் சொந்த காரணங்களால் தொடரிலிந்து விலகியதை அடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதன் மூலம், அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திலும் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கம்பேக் கொடுக்கும் வகையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது பெயரை பதிவுசெய்யவில்லை. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அதன்பின் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாட முடிவுசெய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் ஸ்டோக்ஸ் தற்சமயம், எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரணங்களால் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து விலகுவாதாக முடிவுசெய்துள்ளார். 

Advertisement

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் காயம் கரணமாக அத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில், அதன்பின் அடுத்தடுத்த தொடர்களிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ், 2 சதம், 2 அரைசதங்கள் என 935 ரன்களையும், 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News