ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் - தகவல்

Updated: Mon, Jan 17 2022 21:34 IST
Ben Stokes To Sit Out IPL 2022 Auctions; Reports (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5ஆவது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரு கேப்டன் ரூட்  மற்றும் துணைக்கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு சிறுது கால அவகாசம் தேவைப்படுகிறது. 

அதன் காரணமாக அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ், கடந்த சீசனின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அதுமட்டும் இல்லாமல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் சிறிதுகாலம் ஓய்வெடுத்துக்கொண்டார். 

அதன்பின் தற்போது ஆஷஸ் தொடரில் தான் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை