ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Sun, Dec 15 2024 09:54 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷஃபாலி வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனையன ஷஃபாலி வர்மா தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் அழ்ந்துள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பேசிய அவர், “ஷஃபாலி வர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து நீங்கள் சரியான நபரை கேளுங்கள் என்று தான் நான் சொல்கிறேன், ஏனென்றால் இங்கு இருக்கும் அணியைப் பற்றி மட்டுமே என்னால் பேச முடியும். அதுதவிர்த்து இந்தத் தொடரை வெல்ல நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து வேண்டுமானால் கூறுகிறேன்.  ஷஃபாலி அல்லது வேறு எந்த வீரரைப் பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும் எனில் அதனை, சரியான நபர்களிடம் கேட்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார். 

ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்த பதிலானது இந்திய ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா இதுவரை 5 டெஸ்ட், 29 ஒருநாள் மற்றும் 85 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்கள் என 3ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர்த்து நடப்பாண்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீரராகவும் உள்ளார். இந்நிலையில் அவரது நீக்கம் குறித்த சரியான விளக்கத்தை அணியின் கேப்டனே கூறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, நந்தினி காஷ்யப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தீப்தி சர்மா, சஜனா சஜீவன், ரக்வி பிஸ்ட், ரேணுகா சிங் தாக்கூர், பிரியா மிஸ்ரா, டைட்டாஸ் சாது, சைமா தாக்கூர், மின்னு மணி, ராதா யாதவ்

Also Read: Funding To Save Test Cricket

இந்திய மகளிர் ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டிடாஸ் சாது, சைமா தாக்கூர், ரேணுகா சிங் தாக்கூர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை