ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Advertisement

அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தர்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

 

இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஓராண்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் முன்னாள் வீரர்கள் கபில் தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் ஓராண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 1983ஆம் ஆண்டு 75 விக்கெட்டுகளையும், 1979ஆம் ஆண்டு 74 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 2002ஆம் ஆண்டு 51 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தவரிசையில் தற்சமயம் ஜஸ்பிரித் பும்ரா இந்தாண்டு (2024) 50 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News