BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

Updated: Wed, Dec 04 2024 18:32 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் இப்போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்காக இந்திய அணி அடிலெய்ட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் இந்திய அணி பயிற்சி மேற்கொள்வதை பார்ப்பதற்கு மட்டும் சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமாக ரசிகர்கள் மைதானத்தில் கூடியதாக தகவல்கள் வெளியாகின. இதில் சில ரசிகர்கள் இந்திய வீரர்களை வார்த்தைகளால் வசைபடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

மேலும் வலைகளுக்கு அருகாமையில் ரசிகர்கள் நிற்பதால், வீரர்களின் ஒவ்வொரு செயலிற்கும் ரசிகர்கள் தொடர்ந்து வர்ணனைகள் செய்வதாகவும், அதனால் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களீல் சிலர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தவறவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பயிற்சியில் விக்கெட்டை இழக்கும் வீரர்களை ரசிகர்கள் அருகிலிருந்து கேலியும் செய்து சிரித்துள்ளனர். இதனால் வீரர்களால் பயிற்சியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இனி வரும் நாள்களில் இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள மைதானங்களில் ரசிகர்களின் அனுமதி மறுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ரசிகர்களின் சத்தம் அல்லது கவனச்சிதறல்களைக் குறைப்பதற்காக, இந்திய அணியின் எஞ்சியுள்ள பயிற்சி அமர்வுகளில் பொதுமக்களுக்குத் அனுமதி வழங்கக்கூடாது என இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை