விராட் கோலியின் பலவீனம் இதுதன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருவது இந்திய அணி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில் இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 37 ரன்னிலும், ஷுப்மன் கில் 31 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்கள் தவிரர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளி இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்திய அணி 109 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த போட்டியில் சதமடித்து கம்பேக் கொடுத்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இப்போட்டியில் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவதாக அவரது பலவீனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “விராட் கோலியின் சராசரி இப்போது 48 ஆக சரிந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் அவுட்சைட் ஆஃப் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறுவதே. அதுவே அவரின் பலவீனமாகவும் மாறியுள்ளது. ஆனால் இதுவரை அவர் அதனை சரி செய்ய வேறு வழியை முயற்சிக்காமல் இருக்கிறார்” என்று பதிவுசெய்துள்ளர்
இந்நிலையில் விராட் கோலியின் பலவீனம் குறித்து சஞ்சு மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ள இக்கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுவது போலவே கடந்த சில ஆண்டுகளில் விராட் கோலி வேகப்பாந்துவீச்சுக்கு எதிராக அவுட் சைட் ஆஃப் பந்துகளில் அதிகமுறை விக்கெட்டினை இழந்துள்ளார். மேலும் அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல்ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா(கே), நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.