BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!

Updated: Wed, Sep 04 2024 09:16 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த தங்களது கணிப்புகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் தற்போதுள்ள வீரர்கள் என அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்சமயம் அவர்களது வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் இணைந்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது ரசிகர்களின் காவனத்தை ஈர்த்தூள்ளது.

இதுகுறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று நீண்ட நாள்கள் ஆகிறது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இது என்று நம்புகிறேன். மேலும் அவர்கள் இங்கு எங்களைத் தொற்கடித்த இடங்களில் நாங்கள் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.

Also Read: Funding To Save Test Cricket

அதனால் அந்த நம்பிக்கையுடன் இந்த முறை இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வோம். இந்தியாவுக்கு எதிராக கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தோம். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதனால் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். அதனால் இதில் இரு அணிகளும் 50-50 வாய்ப்பை பெறும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை