பிருத்வி ஷா தனது நண்பர்களுடன் மும்பையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போஜ்பூரி நடிகை சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவருடம் 2 புகைப்படங்களுக்கு மேல் எடுக்க கூடாது என்று சொல்லியும், மறுபடியும், மறுபடியும் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

Advertisement

ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. இதன் காரணமாக பிருத்வி ஷாவின் நண்பரது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிருத்வி ஷா அளித்த புகாரின் பேரில் ஓஷிவாரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். 

Advertisement

கடந்த 17 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நிலையில், வெளியில் வந்த சப்னா கில், பிருத்வி ஷா மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 

மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சப்னா கில் கூறியிருப்பதாவது, “தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆதலால், அவர் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மது போதையிலிருந்த பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் தாக்கூரை கடுமையாக தாக்கினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 10 பிரிவுகளின் கீழ் பல புகார்களை அளித்துள்ள நிலையில், அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சப்னா கில் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டதிலிருந்து இருவரும் ஒருவர் மீது ஒருவராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இதுவரையில் பிருத்வி ஷா மீது காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News