Barbados Royals vs Guyana Amazon Warriors, Match 16 Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி ஒரு தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் கயானா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

BR vs GAW : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பார்படாஸ் ராயல்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்.
  • நேரம் - செப்டம்பர் 15, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

BR vs GAW : Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 51 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 139 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

BR vs GAW : Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Advertisement

BR vs GAW : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 05
  • பார்படாஸ் ராயல்ஸ்- 02
  • கயானா அமேசன் வாரியர்ஸ் -  03
  • முடிவில்லை - 00

Barbados Royals vs Guyana Amazon Warriors Probable Playing XI

பார்படாஸ் ராயல்ஸ்: குயின்டன் டி காக், ரஹ்கீம் கார்ன்வால், அலிக் அதானாஸ், டேவிட் மில்லர், ரோவ்மேன் பாவெல், ரிவால்டோ கிளார்க், ஜேசன் ஹோல்டர், மஹீஷ் தீக்ஷ்னா, கேசவ் மகாராஜ், ஓபேட் மெக்காய், நவீன்-உல்-ஹக்.

Advertisement

 

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், டிம் ராபின்சன், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், அசாம் கான், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், குடாகேஷ் மோட்டி, ஜூனியர் சின்க்ளேர், ஷமர் ஜோசப், இம்ரான் தாஹிர் (கே)

Barbados Royals vs Guyana Amazon Warriors Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - ரோவ்மன் பாவெல், டேவிட் மில்லர், ஷிம்ரான் ஹெட்மையர், கீமோ பால்
  • ஆல் ரவுண்டர்கள் - டுவைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - குடகேஷ் மோட்டி, மஹீஷ் தீக்ஷனா, இம்ரான் தாஹிர்
Advertisement

BR vs GAW Dream11 Prediction, BR vs GAW Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, BR vs GAW Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Barbados Royals vs Guyana Amazon Warriors

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News