இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று, தொடரில் சமநிலையில் உள்ளன.

Advertisement

இந்த தொடரின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. முதல் டெஸ்ட்டிலிருந்தே முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். ஆனால் கண்டிஷனை காரணம் காட்டி அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவதேயில்லை.

Advertisement

இந்நிலையில் 3வது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 2ஆம் தேதி லண்டன் ஓவலில் நடக்கும் 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில், அஸ்வின் மற்றும் ஷர்துல் தாகூரை இந்திய அணியில் சேர்ப்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக்,“ரவீந்திர ஜடேஜாவுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அடுத்த போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக அஸ்வின் ஆடுவார். ஷர்துல் தாகூர் நன்றாக ஸ்விங் செய்வார். நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். அஷ்வின் பவுலிங்கில் பந்து நன்றாக திரும்புவதுடன், நன்றாக பவுன்ஸும் ஆகும். எனவே இந்திய அணியில் இந்த 2 மாற்றங்கள் செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஷாந்த் சர்மா அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News