இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த பிரெட் லீ!

Updated: Tue, Feb 21 2023 11:00 IST
Brett Lee Fires Away Mystery Spinner Warning For Team India Ahead of 3rd Test (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் மேலும் ஒரு வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்று விடும். அப்படி இரண்டு போட்டியில் டிரா தழுவினால் கூட இலங்கை அணி நியூசிலாந்து இடம் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறி விடும்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வேக பந்துவீச்சாளர் பிரேட் லீ எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். அதில், “இந்திய அணிக்கு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயனுக்கு பிறகு சுழற்பந்து வீசக் கூடியவர் யார் என்று கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

தற்போது இந்த தொடர் மூலம் அதற்கு ஆஸ்திரேலியா பதில் கண்டுபிடித்து விட்டது என்று நினைக்கிறேன். 22 வயதான ஆப்  ஸ்பின்னர் டாட் மர்ஃபி தனது அறிமுகத் தொடரிலே சிறப்பாக செயல்பட்டு கலக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளின் இழந்தாலும் முர்பி தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் உலகத்தையே கவனிக்க வைத்திருக்கிறார். நாக்பூர் டெஸ்டில் இந்தியா பேட்டிங் செய்த போது மர்ஃபி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதில் நாம் கவனிக்க வேண்டியது ராகுல், அஸ்வின், புஜாரா, கோலி, ஜடேஜா ஆகியோர்களின் விக்கெட்டுகளை மர்ஃபி தான் கைப்பற்றி இருக்கிறார். இது தனது அறிமுக போட்டியில் களமிறங்க துடிக்கும் ஒவ்வொரு வீரரின் கனவாகும். அதுவும் தனது குடும்பத்தினர் இவரை காண்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து நாக்பூர் வரை வந்திருந்தனர். அவர்களுக்கு முன் இதனை முர்பி செய்திருக்கிறார். இந்திய ஆடுதளங்கள் அவருடைய பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருப்பதால் இன்னும் அவர் பல்வேறு சாதனைகளை செய்வார் என நான் நம்புகிறேன்.

இந்தியா தொடரை போல் இன்னும் பல கடினமான தொடரில் ஆஸ்திரேலியா விளையாட முடிகிறது. இதிலும் அவர் தனது திறமையை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் நல்லதுக்காக இவர் பெரியதாக சாதிக்க வேண்டும். முர்பியின் பிரம்மாண்ட கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பக்கமாக பார்டர் கவாஸ்கர் தொடர் இருக்கும் என நான் நம்புகிறேன். இந்தியா இனி இவரை கவனியுங்கள்” என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை