உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - பிரெட் லீ!

Updated: Mon, Mar 13 2023 17:17 IST
Brett Lee wants 23-year-old pacer to make Test debut for India! (Image Source: Google)

இந்திய அணியில் எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததில்லை. அந்த குறையை தீர்த்துவைத்தவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம்  வேகபந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தான்.

ஐபிஎல்லில் 150-157 கிமீ வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான உம்ரான் மாலிக், இதுவரை  8 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிய முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர் என்பதால் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரை ஆடவைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில், உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று பிரெட் லீ கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பிரெட் லீ, “உம்ரான் மாலிக் சூப்பர் ஸ்டார் பவுலர். டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்கை கண்டிப்பாக எடுக்கலாம். நல்ல வேகம், அருமையான ஆக்‌ஷனை பெற்றிருக்கிறார். எனவே அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை